பரததர்சனா நடனாலயம் சுவிஸ்லாந்து
Bharatha TharshanamBharatha TharshanamBharatha Tharshanam
+41 79 530 45 12
thisha@bluewin.ch
Willisau, Switzerland.

பரததர்சனா நடனாலய அரங்கேற்றம் (05 . OCT . 2025)

பரதநாட்டிய அரங்கேற்றம் என்பது, பரதநாட்டிய மாணவர் தனது பயிற்சியின் முடிவில், குருவின் வழிகாட்டுதலுடன், ஒரு முழுமையான நாட்டிய நிகழ்ச்சியை முதல்முறையாக பொது மேடையில் நிகழ்த்துவதாகும்.

இது “அரங்கு ஏற்றம்” என்ற சொல்லில் இருந்து வந்தது, அதாவது அரங்கேறும் அல்லது மேடையேற்றம் ஆகும். இது மாணவர்கள் தங்கள் திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு புனிதமான மற்றும் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

குரு-சிஷ்ய உறவின் உச்சம். நீண்ட கால பயிற்சிக்குப் பிறகு, மாணவர் குருவின் துணையுடன் தனது திறமையை வெளிப்படுத்தும் தருணம் இது. அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பின் அடையாளம். அரங்கேற்றம் என்பது வெறும் நடன நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், மாணவரின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மற்றும் தியாகத்தின் வெளிப்பாடாகவும் அமைகிறது.

பரதநாட்டிய பாரம்பரியத்தை நிலைநிறுத்தி, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு முக்கியமான படியாக உள்ளது. எனது மகள் ஷாஜினி மாணவிகள் அமலி,சாகனா ஆகியோரின் வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனையாகும். இது அவர்களின் கலையுணர்வை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எங்களுக்கிடையிலான உறவையும், பரதத்தின் தொன்மையையும், தமிழர் கலைவடிவத்தின் அழகியலையும் உலகிற்கு எடுத்துகாட்டுகின்றது.

அரங்கேற்ற மாணவிகள்

செல்வி. ஷாஜினி திஷாந்தன்

செல்வி. அமலி பிரதாபன்

செல்வி. சாகனா ஆனந்தராசா

செல்வி. ஷாஜினி திஷாந்தன்

குடும்பத்தினரின் வாழ்த்துச் செய்தி

செல்வி. ஷாஜினி திஷாந்தன் குடும்பத்தினரின் வாழ்த்து செய்தி

எம் தாயக மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து ஆணிவேர் அறுந்து அரைவேருடன் அடைக்கலம் கோரி “அகதி” எனும் அந்தஸ்தைப் பெற்று சுவிட்சர்லாந்து தேசத்தில் அடிவைத்த .....

செல்வி. அமலி பிரதாபன் குடும்பத்தினரின் வாழ்த்து செய்தி

பரதம் என்பது எமக்கு எமது பாரம்பரியக் கலை. ஆனால் அமலிக்கோ அதுவே அவளது உயிரின் விதை. அதில் அவள் வளர்ந்து, மிளிர்ந்து இன்று அவளது கனவுகள் என்னும் சிறகுகள் ஆகாயம் வரை தழுவி....

செல்வி. சாகனா ஆனந்தராசா குடும்பத்தினரின் வாழ்த்து செய்தி

ஈழமணித் திருநாடாம் ஈழத்தின் வடமாகாணத்தில் பிறந்து புலம்பெயர் தேசத்தில் வாழும் நாம் எமது கலை, கலாச்சாரத்தை மண்வாசனை மாறாது இளையோருக்குக் கற்றுக்கொடுப்பதில்.....

செல்வி. அமலி பிரதாபன்

குருவினதும் மாணவிகளினதும் வாழ்த்துச் செய்தி

குருவின் வாழ்த்துச் செய்தி...

ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் அரும்பெருஞ்சுடராய் விளங்குவது பரதமுனிதந்த பரதக்கலையாகும். பாவம், ராகம், தாளம் மூன்றின் முன்னெழுத்துக்களுடன் எழுந்த பரத கலையானது, ஆடலரசன் உலகையே ஆளும் நாயகன் நடராஜ பெருமான் திருவடிகளில் இருந்து தோன்றி இன்று பரிணாமம் பெற்று பரிமளிக்கின்றது....

குருவிற்கு நன்றி...

சுவிஸ்லாந்து தேசத்தின் மையப் பகுதியில் ஓர் அழகாபுரி அந்த அழகாபுரியின் நடுவே ஒரு ஆடற் கலையாலயம் அதுவே லுட்சேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பரததர்சனா நடனாலயம். அவ்வாலயத்தில் ஓர் தெய்வம் நடனாலயத்தின் இயக்குனராகவும், குருவாகவும் அதைவிட மேலான.....

செல்வி. சாகனா ஆனந்தராசா

விருந்தினர் வாழ்த்துச் செய்தி

பிரதம விருந்தினர் கலைமாமணி மதுரை இரா. முரளிதரனின் வாழ்த்துச் செய்தி

இலங்கையில் பிறந்து ஈடிலா பரதக்கலை பயின்று தனக்கென ஓர் பாணியை உருவாக்கி சுவிட்சர்லாந்து நாட்டில் குடி பெயர்ந்து பரததர்சனா என்ற......

கெளரவ விருந்தினர் முனைவர் திருமதி. மதிவதனி சுதாகரனின் வாழ்த்துச் செய்தி

பரதம் என்றால் அழகு கண்களுக்கும், காதுகளுக்கும் இன்பத்தை தருவது. நடனம் ஆடுபவர்கள், பாவம் இராகம் தாளம் இவற்றினை நன்கு உணர்ந்து ஆடினால்......

செல்வி. ஷாஜினியின் அப்பம்மாவின் ஆசிகள்

பரததர்சனா நடனாலயத்தின் ஆசிரியையும் எனது மருமகளான காயத்திரி தனது மூன்றாவது வயதிலிருந்தே பரதநாட்டியத்தினை பக்தியுடன்.....

செல்வி. ஷாஜினியின் அம்மம்மாவின் ஆசிகள்

அன்புமயமான காலைக் கதிரவன் வணங்கும் நேரம், இனிமை கலந்த சிரிப்புடன் உங்கள் அரங்கேற்றம் நிகழும் தருணம்!....

அருள் மிகு லுட்சேர்ன் துர்க்கை ஆலயம் அருளாசி...

பார்த்த கணமே பதிந்திடும் முகம் பழகிய மனம் விலகிடா குணம் கொண்ட கலைத்தாயின் பிள்ளை காயத்திரி ஆசிரியரே! ....

பரததர்சனா அறப்பணி நிதியத்தின் வாழ்த்துசெய்தி

ஓர் சமூகக் கட்டமைப்பின்றிய காலமாகவும் கட்டமைக்கப்பட்ட காலமாக இருப்பினும் அதன் வாழ்வியலில் கலை ஆழ்ந்து தெளிந்து நிகழ்ந்து நிலைகொண்டு ....

செல்வி. ஷாஜினியின் அப்பப்பா, அம்மம்மாவின் ஆசிகள்

எங்கள் அன்பு பேத்தி ஷாஜினி அம்மம்மா என்று வாய்நிறைய அழைக்கும்போது என் மனம் குளிர்ச்சியடைவதை என் மனக்கண்களால் நான் உணர்ந்து. ....

ஆசியுரை - அருட்கலாநிதி. ஆனந்தநாயகம் யூட்ஸ் முரளிதரன்

நம் முத்தமிழானது தம்முள் ஒன்றியவரை கடவுளோடு ஒன்றிக்கும் சிறப்புடையது. அதில் நாட்டியமானது அனைத்திலும் முதன்மை.....

வாழ்த்துச் செய்தி - ஸ்ரீமதி சுபித்திரா கிருபாகரன்

என் அருமை மாணவியும், பரததர்சனா நடனாலயத்தின் அதிபருமாகிய ஸ்ரீமதி காயத்திரி திஷாந்தனின் புதல்வி செல்வி ஷாஜினி திஷாந்தன்.....

சிறப்பு ஆசிகள் - திருமதி. தாமரைச்செல்வி இராஜேந்திரன்

தொன்று தொட்டு வரும் கலைகளில் சிறந்ததாக விளங்குவது ஆடல் கலையே மனவுணர்வுகளை முகபாவத்தின் ஊடாகவும் உடல் அங்கத்தின் அசைவுகள்......

செல்வி. சாகனாவின் அப்பப்பா அம்மம்மா ஆசிகள்

புலம்பெயர் நாட்டிலே எம் இனம் வியந்து நோக்க பரதக்கலையை பயின்று பெற்றவர்கள் அகமகிழ, குருவின் ஆசியுடன் தாளத்துடனும், மங்கள ......

திரு. கோவி.ரா.செந்தில்குமார் - மிருதங்க வித்துவானின் ஆசிகள்

உலகம் புகழும் நாட்டியக்கலையை சுவிஸ் நாட்டில் லுசேர்ன் மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியை திருமதி காயத்திரி ......

வாழ்த்து இதழ் - லுட்சேர்ன் தமிழ்மன்றம், கலைப்பிரிவு

அரங்கேற்றம் காணும் பரததர்சனா நடனாலய ஆசிரியை திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களின் மாணவிகளான செல்வி ஷாஜினி திஷாந்தன்......

சுக் தமிழ்ப் பள்ளியின் வாழ்த்துச் செய்தி

சிவபெருமானால் பரதமுனிவருக்கும் பரதமுனிவரால் இப் பூவுலகிற்கும் தோற்றுவிக்கப்பட்டது பரதக்கலை என்பர். நடராசப்பெருமான் நடம் கண்ட தெய்வீகக் கலை......

அருளாசிச்செய்தி - சிவஸ்ரீ இராம.சசிதரக் குருக்கள்

பரத தர்ஷனா நடனாலய ஆசிரியர் திருமதி காயத்திரி திஷாந்தன் மாணவியும் அவர்களின் மகளுமான 15 வருடங்களாக நடனக் கலையைக் கற்கும்......

நிகழ்ச்சி நிரல்

1. விநாயகஸ்துதி

இராகம் - லதாங்கி
தாளம் - ஆதி

2. தோடைய மங்களம்

இராகம் - இராகமாலிகா
தாளம் - தாளமாலிகா

3. ஜதீஸ்வரம்

இராகம் - இராகமாலிகா
தாளம் - மிஸ்ரசாபு

4. கௌத்துவம்

இராகம் - கல்யானி
தாளம் - சங்கீர்ணஜாதி திரிபுட

5. வர்ணம்

இராகம் - நளினகாந்தி
தாளம் - ஆதி

6. அனுமான் பக்தி

இராகம் - வராளி
தாளம் - மிஸ்ரசாபு

7. கீர்த்தனம்

இராகம் - சிவரஞ்சினி
தாளம் - ஆதி

8. பதம்

இராகம் - ஸ்ரோதஷ்வினி
தாளம் - மிஸ்ரசாபு

9. வீரம்

இராகம் - இராகமாலிகா
தாளம் - ஆதி

10. தில்லானா

இராகம் - நாசிகாபூசனி
தாளம் - சங்கீர்ணஜாதி திரிபுட

11. மங்களம்



அணிசேர் கலைஞர்கள்

நட்டுவாங்கம் நடன வடிவமைப்பு

திருமதி. காயத்திரி திஷாந்தன்

வாய்ப்பாட்டு

திரு. பிஜேஷ் கிருஸ்ணா

மிருதங்கம்

திரு. முத்துக்கிருஸ்ணன் தனம்ஜெயன்

வயலின்

செல்வன். பரமேஸ்வரலிங்கம் பிரசாத்

தபேலா

திரு. ஜெயேந்திரன் பிரவீன்

வீணை

செல்வி. மாலதி மதியழகன்

பாட்டு

திருமதி. வைஷ்ணவி கவிகாந்

அரங்க தொகுப்பாளர்

திரு செல்வநேசன் கவிதரன்

ஒப்பணை

திரு. செல்வராஜ் அல்பேட்

நன்றிகள்

நிழல்பட வடிவமைப்பு

திருமதி. ம. சுகிர்தமலர்

அழைப்பிதழ் மற்றும் இலத்திரனியல் வடிவமைப்பு

திரு. செ.மதுசூதனன்

இணையத்தள வடிவமைப்பு

திரு. கோ.திலீபன்

ஒலியமைப்பு

செல்வன். ர. ஹரிஷ்

ஒளி வடிவமைப்பு

திரு. கீர்த்தி குமார்

ஒளி நெறியாள்கை

செல்வி. ஜோனிதா நரேந்திரா ஜெய்ன்

வெளிப்புற படப்பிடிப்பு

செல்வன். தயஸ்குமார் தருஷாந்

அரங்க வடிவமைப்பு

திரு. ந.சிவதாஸ்

ஆடைகள் ஆபரணங்கள் வடிவமைப்பு

திரு. வி.தினேஷ்

உணவு உபசரிப்பு

லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம்

ஒளிப்பதிவு

திரு. பஜேந்திரன் வசி

ஒருங்கிணைப்பு

பரததர்சனா நடனாலயம்

நன்றிகள்

சிவ ஸ்ரீ இராம. சசிதரக்குருக்கள்
சிவஸ்ரீ ந. அகத்தீஸ்வரக்குருக்கள்
சிவஸ்ரீ இ. சண்முகநாதக்குருக்கள்
சிவஸ்ரீ சு. வைத்தீஸ்வரக்குருக்கள்

நன்றிகள்

திரு. கலைமாமணி மதுரை இரா. முரளிதரன்
முனைவர். திருமதி. மதிவதனி சுதாகரன்
திரு. கிருஷ்ணன்குட்டி பிஜேஷ்
திருமதி. வைஷ்ணவி கவிகாந்த்

நன்றிகள்

திரு. முத்துக்கிருஷ்ணன் தனம்ஜெயன்
செல்வன். பரமேஸ்வரலிங்கம் பிரசாத்
திரு. ஜெயேந்திரன் பிரவீன்
செல்வி. மாலதி மதியழகன்

நன்றிகள்

திரு. செல்வராஜ் அல்பேட்
திரு. செல்வநேசன் கவிதரன்
திரு. பொன்னம்பலம் சிறிமுருகதாஸ்
திரு. பாலச்சந்திரன் அமுதகரன்

நன்றிகள்

திரு. சத்துரு சங்காரம் மிதுலன்
திரு. மாணிக்கன் ராஜேந்திரன்
திரு. சுப்பையா ரவீந்திரன்
லுட்சேர்ன் தமிழ் மன்றம்

நன்றிகள்

லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம்
நலன் விரும்பிகள், கலை ஆர்வலர்கள்
கலை ஆசிரியர்கள், உடன் உழைப்பாளர்கள்
பெற்றோர்கள், மாணவர்கள்