துர்க்கை அம்மன் ஆலயம் அருளாசி……..
பார்த்த கணமே பதிந்திடும் முகம் பழகிய மனம் விலகிடா குணம் கொண்ட கலைத்தாயின் பிள்ளை காயத்திரி ஆசிரியரே! பரததர்சனா நடனாலய பரதநாட்டிய குருவே! நாட்டிய அசைவினை ஊட்டி நீங்கள் தீட்டிய நடன மயில்கள் பல… கலைகள் ஊடாக கருத்துக்களையும், கதைகளையும் காத்திரமாய் படைக்கும் கலைத்திறன் படைத்த கலைத்தாய் “காயத்திரி”.
மழலை மொழியே தா, தெய் என்று பேசி, அன்னையின் முகம் பார்த்து அபிநயித்து கண்களால் கதை பேசி பாலர் பருவம் ஐந்தில் பரதம் பழகிடவந்த ஷாஜினி பதினைந்து வருடங்கள் கற்று பதித்தாள் பெரும் சாதனை. அன்னையை குரு குல குருவை உயர்வாய் கொண்ட எவரும் தோற்பது இல்லை என்ற நிருபணமானாள் இன்று.
பாலன் பஞ்சம் பத்தே வருடம் கடந்தவளாய் ஆடி பார்திடுவோமென ஆசையாய் வந்த அமலி வருடங்கள் பத்தினை கடந்து அசத்திவிட்டாள் அனைவரையும் தன் பரதத்தில் ஆள்த்திவிட்டாள் இன்று.
பத்து வயதெனில் புத்தகப் படிப்பையே சுமையாய் எண்ணும் பலரின் தன்மையை மாற்றி சகலகலா வல்லவியாவேன் என்ன பெருவிருப்போடு சலங்கையை கட்டிய சாகனா! சரித்திரத்தில் ஒரு பக்கமானாள் இன்று.
லுட்சேர் துர்க்கையம்பாள் ஆசிகள் என்றும் உங்கள் பக்கமாக இருக்க எங்கள் கலைகள் வளர்க்கும் பெரும்பணியை ஆற்றுகின்ற உங்களை வாழ்த்திட எங்களிடம் வார்த்தைகளில்லை
எங்கள் துர்கையம்பாள் திருவிழாகாலங்களிலும் ஏனைய சிறப்பான நிகழ்வுகளிலும் தங்கள் பரதநடன நிகழ்வினை கருத்துக்களுடன் வடிவமைத்து, பார்ப்பவர் மனங்களை குளிர்விக்க வைக்கும் உங்களை துர்கையம்பாள் என்றைக்குமே மகிழ்வாக வாழ வைப்பாள்.
அருள் மிகு லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம்.
லுட்சேர்ன். சுவிஸ்லாந்து
