பரத தர்ஷனா நடனாலய ஆசிரியர் திருமதி காயத்திரி திஷாந்தன் மாணவியும் அவர்களின் மகளுமான 15 வருடங்களாக நடனக் கலையைக் கற்கும் செல்வி ஷாஜினி அவர்களும்,திரு திருமதி பிரதாபன் தம்பதிகளின் புதல்வியும்10 வருடங்களாக நடனக் கலையைக் கற்கும் செல்வி அமலி அவர்களும் மற்றும் திரு திருமதி ஆனந்தராசா தம்பதிகளின் புதல்வியும்10 வருடங்களாக நடனக் கலையைக் கற்கும் செல்வி சாகனாஆகிய மூன்று மாணவிகளும் இன்று அரங்கேற்றம் காண்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
திருமதி காயத்திரி திசாந்தன் அவர்கள் தங்கள் மகளான ஷாஜினியை இக்கலைத் துறையில் ஈடுபடுத்தி இருக்கின்றார்கள். மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? என்பதற்கிணங்க செல்வி ஷாஜினி அவர்களும் சிறப்பான முறையில் நடனக் கலையை பயின்றுள்ளார். அதுபோல திரு திருமதி பிரதாபன் தம்பதிகள் தங்கள் மகளான அமலியையும் மற்றும் திரு திருமதி ஆனந்தராசா தம்பதிகள் அவர்களின் மகளான சாகனா அவர்களையும் இக்கலைத் துறையில் ஈடுபடுத்தி இருப்பது பாராட்டத்தக்கது.
விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, பொறுமை, தன் நம்பிக்கையுடன் இக்கலையைப் பயின்று இன்று அரங்கேற்றம் காணும் அவர்களை மனதாரவாழ்த்துகின்றேன்.
பல சோதனைகள், வேதனைகள் சவால்களைத் தாண்டி இன்று சாதனை படைக்கும் இம் மூவரும் பாராட்டுதற்குரியவர்கள்.அவர்கள் இச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த கலை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களையும் இந்நேரத்தில் வாழ்த்தி ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அரங்கேற்றம் என்பது முடிவல்ல. தொடர்ந்தும் அவர்கள் இக்கலையைக் கற்று தன் குருவுக்கும், பெற்றோருக்கும், தாயகத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயற்பட்டு அவர்களும் பல மாணவர்களை உருவாக்கி மென்மேலும் நம் கலைகளை வளர்க்க வேண்டும் எனப் பிராத்திப்பதுடன் நோய் நொடியின்றி இம்மூன்று செல்வங்களும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டுமென மனதார வாழ்த்தி ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
