புலம்பெயர் நாட்டிலே எம் இனம் வியந்து நோக்க பரதக்கலையை பயின்று பெற்றவர்கள் அகமகிழ, குருவின் ஆசியுடன் தாளத்துடனும், மங்கள இசையுடனும் சிறந்த நெறியாள்கையுடனும் முறையாக நடனக்கலைதனைகற்று கண் அசைவுதனில் கால்கள் நர்த்தனம் ஆட கைகள் அபிநயம் பிடிக்க இசையின் ஓசையிலே – இடையும் ஆடிடவே, பேத்தியவள் ஆடற்கலையை பண்ணோடு ஆடிடவே
ஆடல் கலையை பால்ய வயதிலே விருப்போடு கற்று கொண்டு எம்மையும் மகிழ்வித்து, பார்ப்பவர்கள் அகமும், வதனமும் மலர அரங்கேற்றம் செய்யும் எமது பேத்தியே!
இறையாசியுடன் எமது ஆசியும் இரண்டறக் கலந்து -எதிர்காலத்தில் நாட்டிய பேரொளியாகவும் நாட்டிய மயிலாகவும் இவ் விழாவின் நாயகியாக வலம் வர வாழ்த்துகின்றோம் வாழிய வாழிய வாழியவே.