பரததர்சனா நடனாலயம் சுவிஸ்லாந்து
Bharatha TharshanamBharatha TharshanamBharatha Tharshanam
+41 79 530 45 12
thisha@bluewin.ch
Willisau, Switzerland.

செல்வி. ஷாஜினியின் அப்பப்பா, அம்மம்மாவின் ஆசிகள்

  • Home
  • செல்வி. ஷாஜினியின் அப்பப்பா, அம்மம்மாவின் ஆசிகள்

எங்கள் அன்பு பேத்தி ஷாஜினி அம்மம்மா என்று வாய்நிறைய அழைக்கும்போது என் மனம் குளிர்ச்சியடைவதை என் மனக்கண்களால் நான் உணர்ந்து ஆனந்தமடைவேன்.
பிறந்து, வளர்ந்து, தவன்று, ஓடி, பாய்ந்து, நடனமாடிய பாதங்களை கட்டியணைத்தவர்களாக அவளை வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.

பிஞ்சுபாதங்கள் தா, தெய் என்று நடனமிட, கைகள் அபிநயிக்க, கண்களினால். கதைபேசியது இன்று போல் உள்ளது. வெண்ணெய் திருடிய கண்ணனாய், தோழியாய், முருகனாய், வேடனாய், தாண்டவமாடிய நடராஜராய், மீனாட்சி அம்மனாய் அரங்கங்களில் நீ நடனமாடியபோது அனைத்தும் நிஜமாய் காட்சியளித்தாய்.
ஷாஜினியின் பரதக்கலை லுட்சேர்ன் துர்க்கை அம்மனின் அருளாசியுடன் இன்று அரங்கேறுவது கண்டு மகிழ்வடைகின்றேன். பரத. அரங்கமதில் அரங்கேறும். தோழியரான செல்வி. அமலி,
செல்வி சாகனா உங்கள் கலைப்பயணம் சிறக்கவும், கலைப்பணி தொடரவும் அரங்கேறும் இந் நாளில் மனதார வாழ்த்துகிறோம்.

அப்பப்பா, அம்மம்மா
ரவி, சோபா
பகி சித்தப்பா குடும்பம்.