செல்வி. சாகனா ஆனந்தராசா குடும்பத்தினரின் வாழ்த்து செய்தி
அம்மா, அப்பா, தம்பியின் ஆசிகள்….
ஈழமணித் திருநாடாம் ஈழத்தின் வடமாகாணத்தில் பிறந்து புலம்பெயர் தேசத்தில் வாழும் நாம் எமது கலை, கலாச்சாரத்தை மண்வாசனை மாறாது இளையோருக்குக் கற்றுக்கொடுப்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.
நடனக்கலையை கற்பிக்கும் எமது மகளின் குருவாகிய திருமதி காயத்திரி திஷாந்தன் ஆசிரியை அவர்களுக்கு சாகனாவின் பெற்றோராகிய நாமும் ஆசியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆய கலைகள் அறுபத்து நான்கின் (64) தொன்மையையும், சிறப்பும் வாய்ந்த பரதக் கலையினையும் எமது மகள் சாகனா சிறு வயது முதலே மிகுந்த ஆர்வத்துடனும், ஆசையுடனும் கற்றுவந்தார். வாழிடமொழி கல்வியுடனும் மிகவும் சிரமத்தின் மத்தியிலும் சிரத்தையுடன் கற்று வந்தார். பல வேலைப்பழுவிலும் எமது மகளுக்கு ஊக்கமாகவும் விடயாமுயற்சியாகவும் இந் நடனக்கலையை ஆசிரியையான திருமதி.காயத்ரி திஷாந்தன் முறைப்படி கற்றுவித்து வந்துள்ளார்.
இக் கலையினை முறைப்படி கற்று பயின்று இன்று அரங்கேற்றம் செய்யும் எம் சாகனாவை வாழ்த்த வார்த்தை இல்லையே புலம்பெயர் தேசமான சுவிஸ்ஸர்லாந்து நாட்டிலே லுசேர்ன் மாநகரிலே நம்மவர்கள் மத்தியிலே எமது மகளும் தன் திறமைதனை வெளிப்படுத்தும் இந் நன்நாளில் லுசேர்ன் இராஜராஜேஸ்வரி அம்மன், தூர்க்கையம்மன் ஆசியுடன் சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ இறைவனிடம் வேண்டி வாழ்த்துகின்றோம்.