பரதம் என்றால் அழகு கண்களுக்கும், காதுகளுக்கும் இன்பத்தை தருவது. நடனம் ஆடுபவர்கள், பாவம் இராகம் தாளம் இவற்றினை நன்கு உணர்ந்து ஆடினால் இக் கலையின் மென்மையையும், அழகும் சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இப் புனிதமான கலையை இன்று அரங்கப்பிரவேசம் செய்வதற்கு தகமை பெற்றுள்ள நர்த்தகிகளான செல்விகள். ஷாஜினி திஷாந்தன், அமலி பிரதாபன், சாகனா ஆனந்தராசா ஆகியோர் பரததர்சனா நடனாலய ஆசிரியை திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களின் சிரேஷ்ட மாணவிகளாவார்கள்.
அரங்காற்றுகை என்பது தான் கற்ற கலையை, கலையின் நுணுக்கங்களுடன், குரு பெற்றோர் ஆசிகளுடன் சபையோர் முன்னிலையில் தெய்வங்களின் அனுக்கிரகத்துடன் முழுமையாக ஒரு மார்க்க வடிவில் அர்ப்பணித்தல் ஆகும்.
இங்கு அரங்கப்பிரவேசம் செய்யும் நர்த்தகிகளை நெறிப்படுத்தி பரத நாட்டியத்தில் மிளிர வைத்திருக்கும் பரததர்சனா நடனாலய ஆசிரியை திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து, தமது மகள்மாரின் பரதத்தின் மீதுள்ள ஈடுபாட்டினை கண்டு, அவர்களையும் இப் புனிதமான பரதக்கலையை பயிலச்செய்து இன்று அரங்கேற்றம் வரை வழிநடத்தும் பெற்றோர்களிற்கும் மனம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து, பரததர்சனா நடனாலய ஆசிரியரின் மகளாகிய செல்வி ஷாஜினி திஷாந்தனை தனது சிரேஷ்ட மாணவிகளுடன் இணைத்து அரங்காற்றுகை செய்யும் பரந்த மனப்பாங்கிற்கு, காயத்திரி திஷாந்தனிற்கு அகம் நிறைந்த வாழ்துக்களை கூறி, கோணைநாத
பெருமானின் பாதம் பணிந்து எனது குருவினுடைய ஆசீர்வாதத்துடன் ஆசிகளை வழங்குகின்றேன்.
“கலை இன்பமே நிலைஇன்பம்”
அன்புடன்
திருமதி. மதிவதனி சுதாகரன்
திருக்கோணேஸ்வரர் நடனாலய ஸ்தாபகர்,
