எம் தமிழுக்கு கலைக்கும் தலைசாய்த்து இன் வணக்கம்………
அறிந்தும் நுண் அறியாத பெருங் கலைப் பேருலகண்டத்தில் செழித்து வாழ் மானிடப் பெரும் வாழ்நெறிதான் கலை.
” தாமின் புறிவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்”
ஓர் சமூகக் கட்டமைப்பின்றிய காலமாகவும் கட்டமைக்கப்பட்ட காலமாக இருப்பினும் அதன் வாழ்வியலில் கலை ஆழ்ந்து தெளிந்து நிகழ்ந்து நிலைகொண்டு வாழும் எம் தமிழுக்கும் சைவத்திற்கும் முதலாக முறையாக உள்ள பரம் பொருள் பரமேஸ்வரர் சிவமே. அதன் ஆதியந்தம் அறிய இயலாத ஒன்று அவ்வாறு சிவம் உலக இயக்கத்தின் பொருட்டும் மனிதர்கள் பிறந்து வாழ்ந்து உய்யும் பொருட்டும் அருளிய பஞ்சகிருத்தியம் அதனீறான நடனம் எம் கலையின் மகிமையையும் அதன் அளவில்லா தொன்மையையும் காட்டுகிறது.
இவ்வாறு மகத்துவம் நிறைந்த கலையினை பயின்று தான் மகிழ்ந்து அதன் மகிழ்வை மக்களுக்கு உகந்தளிக்க கலை வள்ளலாகி பரதம் புகழ்ந்து பரதம் புகட்டி புலம் பெயர்ந்தும் பெயர் கூறும் உலகளவில் பரததர்சனம் நடனாலயம் என்றும் புகழோடு வாழ வாழ்த்தி தொடர்கிறோம்.
திருமதி காயத்திரி திஷாந்தன் அவர் இந்த மகிமையும் தெய்வத் தன்மையும் நிறை நடனாலய பணி சிறந்தோங்க ஆயகலை அறுபத்து நான்கினையும் உணர்விக்கும் அன்னையருள் கிடைக்க வேண்டி வாழ்த்தி தொடர்கின்றோம்
அரங்கேற அருளாசி பெற்ற நடனாலய தலைமையும் ஆசிரியையுமான திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களின் மகளான கருவிலே கலையீன்ற செல்வி ஷாஜினி திஷாந்தன் அவர்களின் கலை அரங்கேற்ற நிகழ்வு சிறக்கவும் அவரது கலைத் தாயின் அருளால் ஆடல் கலை அரங்கேற்றம் புகழ் பெறவும் இறைவணை வேண்டி வாழ்த்துகிறோம்.
மாணவிகளாகிய கலைத் தாயின் அருளாசி பெற்ற செல்வி அமலி பிரதாபன் மற்றும் செல்வி சாகனா ஆனந்தராசா அவர்களும் பெற்றோர் ஆசிர்வாதம் போல் வாழ்ந்து கலை ஆசான் மனம் போல் மகிழ்ந்தாடல் செய்து சிறப்பான அரங்கேற்றம் நிகழ வாழ்த்துக்கள் கூறி வாழ்த்துகிறோம்.
பரததர்சனம் நடனாலயம் ஈன்ற பரததர்சன அறப்பணி நிதிய ஈழத்து இணைப்பாளர் தலைவர் திரு.தம்பிமுத்து கேசவநாதன் மற்றும் அறப்பணியாளர்கள் உறவுகள் அனைவரும்.
ஆடலிசையால் அகிலமதை ஆளும் ஆளமுண்டார் அடிபோற்றி அனைத்தும் சிறக்கப்படும்.
வணக்கத்துடன்.
பரததர்சனா அறப்பணி நிதியம்.
மட்டக்களப்பு,
இலங்கை.
