சுக் தமிழ்ப் பள்ளியின் வாழ்த்து. ……..
சிவபெருமானால் பரதமுனிவருக்கும் பரதமுனிவரால் இப் பூவுலகிற்கும் தோற்றுவிக்கப்பட்டது பரதக்கலை என்பர். நடராசப்பெருமான் நடம் கண்ட தெய்வீகக் கலை. பிரபஞ்சமே அசைந்தாடி இசைபாடி நடமாடிக் கொண்டிருக்கிறது. அத்தகய இயல்பும் இயற்கையும்,பழைமையும் பண்பாடும் பாரம்பரியமும் பின்னிப் பிணைந்திட பாவம்,இராகம், தாளம் என ஒன்றுள் ஒன்றாய் சங்கமித்து உடல் அசைவுடன்கூடிய செவ்விய ஆடல் பரதநாட்டியம்.
மேலும் பாடல் இசை நடனம் என ஒன்றுள் ஒன்றாய் ஒன்றாகிக் கூட்டுக் கலையாய் மிளிர்ந்து உயர்ந்தோங்கி நிற்கிறது பரதக்கலை இறையும் புனிதமும் நிறைந்த பரதக் கலையினை புலம் பெயர்ந்தாலும் புலன் பெயராது தடம்பதித்து அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்லும் சுவிஸ் நாட்டில் முறைப்படி கலையினைப் பயின்று ஆன்றோர் சபையில் ஆற்றுகையாப் படைத்திடும் பரததர்சனா நடனாலய ஆசிரியர் திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களின் மாணவி செல்வி அமலி பிரதாபனை பாராட்டுவதில் வாழ்த்துவதில் சுக் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் குழாம்,பொறுப்பாளர்கள்,மாணவர்கள், பேருவகை அடைகிறோம்.
விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பது போல் எங்கள் மாணவியாம் பிரதாபன் அமலி பாலர் பருவத்தில் இருந்து தாய்மொழிக் கல்வியுடன் கலைகளிலும் தன்னார்வம் காட்டி முதன்மைபெற்று நின்றதுடன் அன்பு,பணிவு,நன்றியுணர்வு,பிறர்க்கு உதவுதல் என பல நற்பண்புகளையும் வளர்த்துக் கொண்டு உயர்வாய் நிற்கிறார்.
அன்புடனும் ஆசியுடனும்
சுக் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள்
பொறுப்பாளர்கள்
மாணவர்கள்.
