பரததர்சனா நடனாலயம் சுவிஸ்லாந்து
Bharatha TharshanamBharatha TharshanamBharatha Tharshanam
+41 79 530 45 12
thisha@bluewin.ch
Willisau, Switzerland.

வாழ்த்து இதழ் – லுட்சேர்ன் தமிழ்மன்றம், கலைப்பிரிவு

  • Home
  • வாழ்த்து இதழ் – லுட்சேர்ன் தமிழ்மன்றம், கலைப்பிரிவு

வாழ்த்து இதழ் – லுட்சேர்ன் தமிழ்மன்றம், கலைப்பிரிவு……..

அரங்கேற்றம் காணும் பரததர்சனா நடனாலய ஆசிரியை திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களின் மாணவிகளான செல்வி ஷாஜினி திஷாந்தன், செல்வி அமலி பிரதாபன், செல்வி சாகனா ஆனந்தராசா ஆகியோர் உள்ளத்து உணர்வுகளை உடலால் வெளிப்படுத்தி இசையும் சேர்ந்து அசையும் கலை நயமும் கொண்ட தஞ்சையில் தோன்றிய முத்தமிழின் முதற்கலையாம் சீர்மிகு பரதத்தை சுவிற்சர்லாந்து நாட்டில் லுட்சேர்ன் நகரில் பரததர்சனா நடனாலயத்தில் ஐயுறப் பயின்று இன்று அவையோர் காண அரங்கேற்றம் காணுகின்றனர். எம் தமிழ்தாய் லுட்சேர்ன் தமிழ்மன்றம் தந்த தாய்மொழியோடும், செப்புற மொழிந்த நுண்கலையோடும் கற்ற வித்தை கையளவேனும் தரணி புகழ் பெறவே எப்பொழுதும் நீங்கள் உணர்வாய், உயிராய் மதித்து நர்த்தன உலகில் நாளும் பற்பல திறன்கள் கொண்டு பாரினில் புகழ் பெற வேண்டும். கற்றுத் தந்த பரததர்சனா நடனாலயமும், தமிழ்மொழி தந்த லுட்சேர்ன் தமிழ்மன்றமும், பெற்றவர்களும் மிக்க பெருமிதம் கொள்ளும் இவ் அரங்கேற்ற நாளில் வானோங்கு புகழ் கொண்டு வையத்தில் கலை வளர்த்து வாழிய பல்லாண்டு வாழிய வாழியவே!!!