பிரதம விருந்தினர் கலைமாமணி மதுரை இரா. முரளிதரனின் வாழ்த்துச் செய்தி
இலங்கையில் பிறந்து ஈடிலா பரதக்கலை பயின்று தனக்கென ஓர் பாணியை உருவாக்கி சுவிட்சர்லாந்து நாட்டில் குடி பெயர்ந்து பரததர்சனா என்ற நாட்டியப் பள்ளியைத் துவங்கி அப்பள்ளியின் மூலம் பல்வேறு திறமையான மாணவ மாணவியரை உருவாக்கி மேடையேற்றி உன்னதமான நல்லதோர் கலைப் பணியை ஆற்றி வருபவர் எனது அன்பிற்குரிய காயத்ரி திஷாந்தன் அவர்கள் அவரது அருமை மகளும் மாணவியருமான குமாரி அமலி, சாகனா மற்றும் ஷாஜினி அவர்களின் அரங்கேற்றம் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது அறிந்து மிகவும் மகிழ்வடைகிறேன் அரியதோர் ஆசான் அமைவது மிகவும் அரிதாகும் இக்காலக் கட்டத்தில் காயத்ரி திஷாந்தன் அவர்களை குருவாகவும் அன்னையாகவும் பெற்ற குமாரி அமலி சானா மற்றும் ஷாஜினி இருவரும் மிகவும் பாக்கியசாலிகள் என்று என்னால் உறுதியாகக் கூற இயலும். அன்னாரது நாட்டிய அரங்கேற்றம் குருவருளாலும் பெற்றோர்களின் ஆதரவாலும் இறைவனின் திருவருளாலும் சீரும் சிறப்புமாக அமைய எமது வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் உரித்தாகுக.