மிருதங்க வித்துவானின் ஆசிகள்……..
உலகம் புகழும் நாட்டியக்கலையை சுவிஸ் நாட்டில் லுசேர்ன் மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியை திருமதி காயத்திரி திஷாந்தன் பரததர்சனா நடனாலயம் ஏன்ற நாட்டியப்பள்ளியூடாக பரதநாட்டியத்தை பயிற்றுவித்து எண்ணற்ற மாணவிகளை உருவாக்கி வருகிறார்.
பொதுவாக ஐரோப்பாவில் சுவிஸீ நாட்டில் பரதக்கலை தனிச்சிறப்போடு விளங்குகிறது. பரததர்சனா நாட்டியபள்ளியின் அனைத்து மாணவிகளையும் பரதத்துறையில் மிகவும் திறம்பட உருவாக்கி வருகிறார். நான் இந்த பள்ளியின் பல நிகழ்ச்சிகளுக்கு மிருதங்கம் வாசித்து உள்ளேன். குறிப்பாக 2024 ம் ஆண்டு நடைப்பெற்ற இருபதாவது ஆண்டு விழாவில் நான் பங்கு பெற்றேன். மிகவும் சிறப்பாக ஆசிரியர் மாணவிகளை தயார் செய்து நிகழ்வினை மிகவும் சிறப்பாக நடாத்தியிருந்தார்.
மேலும் பல மாணவிகளுக்கு அரங்கேற்றமும் செய்திருந்தார். 05-10-2025 அன்று அரங்கேறுகின்ற மாணவியும் அவருடைய மகளுமான செல்வி.ஷாஜினி திஷாந்தன் சிறு வயதில் இருந்தே மிகவும் திறமையாகவும் நாட்டியக்கலையை மிகுந்த ஆர்வத்தோடு பயிற்சி பெற்று கற்றுவருகின்றதை நான் பார்த்து வருகின்றேன்.
ஷாஜினியின் அரங்கேற்றம் சிறப்பாக இனிதே நடைபெற என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து. அவரோடு சேர்ந்து அரங்கேற்றம் காணும் மாணவிகள் செல்வி.அமலி பிரதாபன் மற்றும் செல்வி.சாகனா ஆனந்தராசா அவர்களையும் மனதார வாழ்த்தி மகிழ்கின்றேன் அரங்கேற்ற நிகழ்வு நல்ல முறையில் சிறப்போடு அமைய எல்லாம் வல்ல ஆடல்வல்லானை பிரார்த்திக்கின்றேன்.
அன்புடன்.
மிருதங்க வித்துவான் திரு. கோவி.ரா.செந்தில்குமார்
தஞ்சாவூர் இந்தியா.
