சிறப்பு ஆசிகள் – திருமதி. தாமரைச்செல்வி இராஜேந்திரன்
சிறப்பு ஆசிகள்……..
தொன்று தொட்டு வரும் கலைகளில் சிறந்ததாக விளங்குவது ஆடல் கலையே மனவுணர்வுகளை முகபாவத்தின் ஊடாகவும் உடல் அங்கத்தின் அசைவுகள் ஊடாகவும். வெளிப்படுத்துவதே இந் நடனக்கலையாகும்.
சாகனா சிறு வயது முதலே நடனக்கலையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவருக்கு உறுதுணையாக பெற்றோரும், நடன ஆசிரியரும் பக்கபலமாக இருந்து வந்துள்ளார்கள்.
தன்னுடைய விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் இவ் ஆடற்கலையினை முறையாகக் கற்று இன்று அரங்கேற்றம் வரை வந்து தனது திறமைகளை வெளிப்படுத்துகின்றார். இவருக்கு எனது வாழ்த்துகீகள்
புலம்பெயர் தேசத்தில் எம்மவர்கள் கலையினை பேணிப்பாதுகாத்து தாம் கற்ற கலையினை இளையோருக்கு கடத்தும் குருவிற்கும் எமது ஆசிகளும் நன்றிகளும்.
மேலும் சாகனா பரதக்கலையில் மட்டுமல்லாது சகல கலைகளிலும் சீருடனும், சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல லுசேர்ன் இராஜராஜேஸ்வரி அம்மன். துர்க்கையம்மன். பாதம் பணிந்து வேண்டி வாழ்த்துகின்றேன்.