வாழ்த்துச் செய்தி……..
என் அருமை மாணவியும், பரததர்சனா நடனாலயத்தின் அதிபருமாகிய ஸ்ரீமதி காயத்திரி திஷாந்தனின் புதல்வி செல்வி ஷாஜினி திஷாந்தன். செல்வி சாகனா ஆனந்தராசா, செல்வி அமலி பிரதாபன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒருங்கே 05.10.2025 அன்று சுவிற்சலாந்தில் நடைபெறுவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
காயத்திரி என்னிடம் நடனக்கலையைக் கற்கும் காலத்தில் விருப்போடும். மிகுந்த பக்தியுடனும் கற்றுக்கொண்டார். அதிக பாடசாலை நிகழ்வுகளிலும் மற்றும் சமய நிகழ்வுகளிலும்பங்கு பற்றிய பாராட்டுகளைப் பெற்றவர். புலம்பெயர்ந்தாலும் தான் கற்ற பரதக்கலையை பல மாணவர்களுக்கும். தன் மகளுக்கும் மற்ற இருவருக்கும் செவ்வனே கற்பித்து சிறப்பாக அரங்கேற்றம் செய்வது பெரிய விடயம்.
தன் பிள்ளைகளை முன்னிறுத்தும் இக்கால நடன ஆசிரியர்கள் மத்தியில் தன் பிள்ளையையும் மற்றவர்களையும் சமமாக பேணி ஒரே மேடையில் ஒன்றாக அரங்கேற்றம் செய்வது மிகவும் பாராட்டத்தக்க செயல். கூத்தபெருமான் ஆசியுடன் இவர்கள் கற்ற வித்தையை குருமுலம் நன்றாக அரங்கேற்றத்தில் திறம்பட செய்து குருவின் நற்பெயரை நிலைநாட்டி புகழ் பெற வாழ்த்துகிறேன்.
பரதக்கலை நமது பாரம்பரியம், நளினம், தூய்மை, தெய்வீகம், மனதிற்கு அமைதி, ஆனந்தத்தையும் தரவல்லது. குருவிடம் கற்ற கலையை பின்பற்றி அதை பரப்புவதே அவர்கள் குருவிற்கு செய்யும் கடமையாகும்.
திருமதி காயத்திரி ரி திஷாந்தனை வாழ்த்தி அவர்கள் புதல்வி செல்வி ஷாஜினி திஷாந்தன். செல்வி சாகனா ஆனந்தராசா, செல்வி அமலி பிரதாபன் ஆகியோரையும் மனதார வாழ்த்துவதோடு அரங்கேற்ற நிகழ்வுகள் சிறப்புடன் அமையவும் நடராஜன் தாழ் வேண்டி பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்.
பரத சூடாமணி நாட்டியகலைமணி, நர்த்தனவித்தகி, நிருத்தியவாணி, கலைச்சுடர்,கலா பூஷணம், நாட்டியக் கலைச்செம்மல், ஆடல்வல்லான் கலைமாமணி, பரத வாணி….
ஸ்ரீமதி சுபித்திரா கிருபாகரன்
மட்டக்களப்பு, இலங்கை
