அப்பம்மாவின் ஆசிகள்………
பரததர்சனா நடனாலயத்தின் ஆசிரியையும் எனது மருமகளான காயத்திரி தனது மூன்றாவது வயதிலிருந்தே பரதநாட்டியத்தினை பக்தியுடன் பயின்று, சிரத்தையுடன் பயிற்றுவித்து வருகின்றார். எனது முதற் பேத்தி ஷாஜினி சிறுவயதிலிருந்தே தாயிடம் பரதநாட்டியத்தை கற்று வருகின்றார். ஷாஜினி மழலை வயதிலிருந்தே நாட்டியத்தின் மீதும், தமிழர் கலைகள் மீதும் மிகுந்த பற்றுள்ளவளாக வளர்ந்ததை அவதானித்துள்ளேன்.
“தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்” என்பார்கள் அதுபோல் ஷாஜினி பல அரங்கநிகழ்வு நடனங்களில் தனது ஆர்வத்தினையும், திறமையையும் திறன்பட காட்டியதை நான் பார்த்ததுடன் பலரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டவள். ஷாஜினியின் பரதக்கலை இன்று அரங்கேறும் வேளையில் அரங்கம் நிறைந்த சபையோர் வாழ்த்த நாட்டியதாரகையாக மிளிர்கின்றாள். எனது மூத்த பேத்தி வரும் காலத்தில் ஓர் நாட்டிய பேரொளியாகப் புகழ்பெற்று தமிழர் கலைக்கும் கலாசாரத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துவதுடன் பெருமையும் பேரானந்தமும் அடைகின்றேன்.
முப்பெரும் தேவியராக பரத அரங்கில் நடனமிடும் செல்விகள் அமலி, சாகனா ஆடல்வல்லானின் ஆசியுடனும், குரு பக்தியுடனும் இப் பரதக்கலையை முறைப்படி கற்று இன்று அரங்கேறுகின்றார்கள். இவர்களும் இப் பரதக்கலையில் பல சாதனைகள் படைத்து பலரும் போற்றி சிறப்புடன் வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல லுட்சேர்ன் துர்க்கை அம்மன் அருள் கிடைக்க வணங்கி வாழ்த்துகின்றேன்.
“வாழ்க வளமுடன்”
அன்புடன் அப்பம்மா
திருமதி. இரஞ்சிதமலர் வெற்றிவேலு.
