அமலி எனும் கலைப்பூவுக்கான வாழ்த்து…..
பரதம் என்பது எமக்கு எமது பாரம்பரியக் கலை. ஆனால் அமலிக்கோ அதுவே அவளது உயிரின் விதை. அதில் அவள் வளர்ந்து, மிளிர்ந்து இன்று அவளது கனவுகள் என்னும் சிறகுகள் ஆகாயம் வரை தழுவி நிற்கின்றன.
ஆறு வயதில் அவளது கலைப்பயணம் பரதாஞ்சலி நடனாலயத்தில் ஆசிரியை திருமதி. அனுசியா சற்குணநாதனின் நல்லாசிகளுடன் ஆரம்பமாகி, இன்று பாரததர்சனா நடனாலயம் எனும் அழகிய கலைக்கோவிலின் நிழலில், ஆசிரியை திருமதி. காயத்திரி திசாந்தன் அவர்களின் வழிகாட்டுதல் மூலம் அமலியை ஒரு அரங்கேற்ற மேடை வரை அழைத்துச்சென்றிருக்கின்றது. அவளைக் கவனமாய்ச் செதுக்கிய சிற்பிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை நவில்ந்து, வணங்கி நிற்கின்றோம்.
அமலி! நடனத்திற்குள் உன் உள்ளம் ஒரு நூலிழைபோல் நுழைந்து, விந்தைகள் பல புரிந்து, எங்கள் உள்ளங்களில் நெகிழ்ச்சியையும் எங்கள் கண்களில் ஆனந்தக்கண்ணீரையும் தந்து பெருமையும் பாசமுமாய் நிறைவான ஆசியுமாய் மலர்கின்றது. இந்த அரங்கேற்றநாள் உன் கலைப்பயணத்தின் புதிய தொடக்கம் மட்டுமல்ல. ஒரு உறுதியும் கூட.

இனி உன் நடனத்தின் வழியே நீ உன் உலகத்தை அலங்கரிக்கப் போகின்றாய்!
உன் பாதங்களில் தோன்றும் ஒவ்வொரு அசைவும் எங்கள் இதயங்களின் துடிப்பாகும். எப்போதும் நீ எங்களின் கலைக்குமரி. வாழ்க! வளர்க! கலையுடன் மிளிர்க! என வாழ்த்தி நிற்கின்றோம். எங்களது குடும்பத்தின் சார்பாக ஆசிரியைக்கும் அமலியோடு பயணித்த மாணவிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்புடனும் பெருமையுடனும் வாழ்த்தும் அப்பா, அம்மா, சகோதரர்கள்
(திரு. திருமதி. பிரதாபன் குடும்பம்)