பரததர்சனா நடனாலயம் சுவிஸ்லாந்து
பரததர்சனா நடனாலயம் பரதக்கலையை புகட்டும் கல்விக்கூடமாகவும், தாயகத்து உறவுகளுக்கான வாழ்வாதார பணிகளை செய்யும் அறக்கட்டளை அமைப்பாகவும் இயங்கி வருகின்றது.
இவ் நடனப்பள்ளி! மனித மாண்புகளை மதித்து, பல் கலாசார பண்பாடுகளைக் கொண்ட பல் இன மக்கள் இணைந்து வாழும் சுவிஸ்லாந்து நாட்டின் மத்திய பகுதியான லுட்சேர்ன் மாநிலத்தில் தலைமையகத்தை கொண்டு இயங்குகின்றது. சுவிஸ்லாந்து நாட்டுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், இந் நாட்டின் பொதுக் கலாசாரத்தை பின்பற்றியும், வேறு பட்ட பல் கலாசாரத்தை அனுசரித்தும் தமிழர்களின் தனித்துவ அடையாளங்களை கட்டி காப்பாற்றி எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல அரும்பாடு படுகின்றார்கள். எமது தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்கு தாய்மொழி, கலை, கலாசாரம், பண்பாட்டு மரபுகள் பேணிக் காக்கப்பட வேண்டும். தமிழர்களின் அடையாளங்களை காப்பாற்றி அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.
அந்தவகையில் மாதா, பிதா, குரு, என்பவர்களுக்கு பல படி நிலைகளில் பலமான பொறுப்புக்கள் உண்டு.
அவ்வழியில் குருவிற்குரிய பொறுப்பான கற்பித்தல் நெறியை கடைப்பிடித்து எதிர்கால சந்ததியினருக்கான பரதக்கலையை கற்பிப்பதோடு, தாயகத்து உறவுகளுக்கான மனிதநேய வாழ்வாதாரப் பணிகளை நோக்கமாகவும் கொண்டு Luzern, Sursee, Zoffingen ஆகிய இடங்களில் பரததர்சனா நடனாலயம் செயல்படுகின்றது. ஆசிரியரும், கலை பயிலும் மாணவர்களும் சக இன மக்களின் கலை நிகழ்வுகளிலும், மத வழிபாட்டு தலங்களிலிலும் நடன நிகழ்வுகளை வழங்கி வருகின்றனர். இவ் நடனாலயம் சுவிஸ்லாந்து அரசின் சட்ட வரை முறைவுகளுக்கமைவாக அங்கீகரிக்கப்பட்ட பரதக்கலை பாடசாலையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.