பரதநாட்டியம் என்பது வெறும் உடல் அசைவு மட்டுமல்ல, அது நம் உடலையும், மனதையும், ஆன்மாவையும் இறைவனோடு இணைக்கும் ஒரு உன்னதமான தெய்வீகக் கலை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கலையை, முறையான பயிற்சி மற்றும் அர்ப்பணிப்போடு கற்றுக்கொண்டு, இன்று தமது முதல் அரங்கபிரவேச பயணத்தைத் தொடங்குகின்றார்கள் செல்வி .சாருணி குகேந்திரன்,செல்வி மிதுர்ஷா சுரேஸ்கரன் இந்த நடனக் கலைமணிகளை எனது கண்ணின் மணிகளாக இத்தனை காலம் நயம்படச் செதுக்க அவர்கள் பொறுமையுடன் தாங்கிய வலிகளினதும் ,வேதனைகளினதும் அறுவடையே இவ் அரங்கேற்றம்
நாட்டியக் கலையின் முதல் படியை எடுத்து வைத்த நாள் முதல் இன்று மேடையேறும் வரை, நீங்கள் சிந்திய வியர்வையும், காட்டிய அர்ப்பணிப்பும், இடைவிடாத பயிற்சியும் சாதாரணமானவை அல்ல. சதங்கையின் ஒலியை உங்கள் இதயத் துடிப்பாக மாற்றி, ஒவ்வொரு முத்திரையையும், அடவையும் நீங்கள் கற்றுக்கொண்ட விதம் என்னை நெகிழச் செய்துள்ளது. இது இவர்களின் கலையுணர்வை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர் மாணவர்கள் என்ற உறவையும் தாண்டி தாய் சேய் என்ற உரிமை உறவையும், பரதத்தின் தொன்மையையும், தமிழர் கலைவடிவத்தின் அழகியலையும் உலகிற்கு எடுத்துகாட்டுகின்றது. அரங்கேற்றம் என்பது ஒரு கலைப் பயணத்தின் முடிவல்ல : அது உங்கள் கலை வாழ்வின் மிக பிரம்மாண்டமான தொடக்கப் புள்ளி.
அரங்கேற்ற மாணவிகள்
செல்வி. சாருணி குகேந்திரன்
செல்வி. மிதுர்ஷா சுரேஸ்கரன்
குடும்பத்தினரின் வாழ்த்துச் செய்தி
செல்வி. மிதுர்ஷா சுரேஸ்கரன் குடும்பத்தினரின் வாழ்த்துச் செய்தி
விதை ஒன்று விருட்சமாக வழிகோலிய கலைத்தாய்க்கு நன்றிகூறி, இதமான அறிவுரையுடன் நிதம் உனை வழி நடத்தி பதமாக உனை ஆக்கியின்று அரங்கேற்ற மேடையில் ஏற்றி வைத்த உன்னத குருவாம் திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களுக்கும் சிரம் தாழ்தி, உனக்கும் உன்னுடன் இணைந்து அரங்கேறும் உன் சகி சாருணிக்கும் எம் மனம் நிறைந்த வாழ்த்துக்களை சமர்ப்பிப்பதில் பேருவகை அடைகின்றோம்.
செல்வி. சாருணி குகேந்திரன் குடும்பத்தினரின் வாழ்த்துச் செய்தி
அன்பு மகள் சாருணிக்கு பெற்றோர் வழங்கும் அரங்கேற்ற வாழ்த்து மடல்!என் அன்பு மகள் சாருணிக்கு,சலங்கை ஒலியும், மிருதங்க லயமும் எங்கள் இல்லத்தை இசையாய் மாற்றிய கணங்கள், இன்று இந்த மேடையில் அரங்கேற்றமாய் அரங்கேறுவதைக் கண்டு எங்கள் பெற்றோர் உள்ளம் பெருமிதத்தால் நிறைகிறது அபிநயங்களின் வழியே நீ காட்டும் பாவங்களும், அடவுகளின் நேர்த்தியும் உன்னுடைய கடின உழைப்பையும்
என் அன்பான சாருணி, மிதுர்ஷா !! உங்களின் இந்த பரதநாட்டிய அரங்கேற்றத் திருநாளில் உங்களை மனதார வாழ்த்துவதில் ஒரு ஆசிரியராக நான் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன் ! நாட்டியக் கலையின் முதல் படியை எடுத்து வைத்த நாள் முதல் இன்று மேடையேறும் வரை. நீங்கள் சிந்திய வியர்வையும், காட்டிய அர்ப்பணிப்பும், இடைவிடாத பயிற்சியும் சாதாரணமானவை அல்ல…
எங்கள் அன்பான குருவிற்கு !! மாதா, பிதா, குரு, தெய்வம் இதன் அர்த்தத்தை இன்று தெளிவுடன் புரிந்து கொண்டோம். எமது இனிய கனவொன்று நினைவாகும் நாள் இந்த நாட்டிய அரங்கேற்றம். எம் வாழ்வின் மைல்கல் இது. இதை அழகாக மெருகூட்டி சாதனையாக்கித் தந்த எம் குருவாகிய நாட்டியப் பெருந்தகை : திருமதி காயத்ரி திஷாந்தன் அவர்களின் பங்கு அளப்பரியது…
கெளரவ விருந்தினர்
திருமதி. நிமலினி ஜெயக்குமார் வாழ்த்து செய்தி …
ஆடல் அரசன் தாழ்பணிந்து, எனது குருவும் சகோதரியுமான கலாபூசணம் திருமதி.பத்மினி செல்வேந்திரகுமார் அவர்களை மனம் நிறுத்தி புனிதமான நுண்கலைகளுள் ஒன்றான பரதக்கலையை புலம் பெயர்ந்து தமது…
பரததர்சனா நடனாலய ஆசிரியர் திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களிடம் 2010 ஆம் ஆண்டு முதல் தன் 10 வது வயதில் நடனம் பயில ஆரம்பித்து 16 வருடங்கள் நடனக் கலையை பயின்று வரும்…
என்பாசமிகு தங்கை சாருணி! இன்று உன்னுடைய பரதநாட்டிய அரங்கேற்றம் மிகச் சிறப்பாக நடைபெறப் போகும் இந்த இனிய நாளில், உனக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…
செல்வி. சாருணி குகேந்திரன் தமிழ் ஆசிரியை வாழ்த்து…
நற்பண்பும் நன்னெறியும் ஒருங்கிணைந்த, எனது மனம் கவர்ந்த மாணவர்களுள் ஒருவரான சாருணி, அரங்கேற்றம் காணும் இவ்வேளையில் பெருமிதம் அடைகிறேன். அரங்கேற்றத்துடன் மட்டும் நின்றுவிடாது…
சின்னஞ்சிறு வயதில் ஒரு காகித விளம்பரம் மூலமாக ஆங்கில பயிற்சிக்கு என்னிடம் இணைந்த நீ. ஓட்டுநர் தேர்விற்கு உன் அன்பு மாமாவிடம் கலந்த நீ இன்று ஒரு ஆலமரமாய், தனித்துவமாய் அபிநய இளவரசியாய் உனது…
துர்க்கை அம்மனின் திருவருளை வேண்டி, கலைத்தாயின் ஆசியுடன் தமது பரதநாட்டிய அரங்கேற்றத்தை மேற்கொள்ளும் சாருணிக்கும் மிதுர்ஷாவுக்கும் லுட்சேர்ன் துர்க்கையம்மன் ஆலய நிர்வாகத்தினர் சார்பில் எமது இதயம்…
நன்றிகள்… சிவ ஸ்ரீ இராம. சசிதரக்குருக்கள்
சிவ ஸ்ரீ இராம சந்திரகாந்த குருக்கள்
திருமதி. ஞானசுந்தரி வாசன்
திருமதி. நிமலினி ஜெயக்குமார்
நன்றிகள்…
திரு. பிரதீவ் கனகலிங்கம்
செல்வன். பரமேஸ்வரலிங்கம் பிரசாத்
திரு. கோவி.ரா.செந்தில்குமார்
திரு. செல்வநேசன் கவிதரன்
நன்றிகள் …
திரு. செல்வராஜ் அல்பேட்
திரு. பொன்னம்பலம் சிறிமுருகதாஸ்
திரு. மாணிக்கன் ராஜேந்திரன் லுட்சேர்ன் தமிழ் மன்றம்
நன்றிகள்…
சிவஞானம் ரங்கநாதன்
லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம்
நலன் விரும்பிகள், கலை ஆர்வலர்கள்
கலை ஆசிரியர்கள், உடன் உழைப்பாளர்கள்
பெற்றோர்கள், மாணவர்கள்