loder

ஸ்ரீமதி சுபித்திரா கிருபாகரன்

  • Home
  • ஸ்ரீமதி சுபித்திரா கிருபாகரன்

ஐந்தொழிலையும் ஒருங்கே இயக்கும் ஆடலரசன் தில்லைக்கூத்தப்பெருமான் மகிழ்ந்து ஆடும்கலை பரதக்கலையாகும். இதனைச் செவ்வனே குரு ஸ்ரீமதி காயத்திரி திஷாந்தனிடம் அடிபணிந்து கற்று 18.6.2023 இன்று அரங்கேறும் செல்வி துஷாந்தி லிங்கதாஸ், செல்வி சகானா குலேந்திர நாதன், செல்வி சாருகா குலேந்திரநாதன். ஆகியோரை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அரங்கேற்றம் திறம்பட நடைபெற நடராஜப் பெருமான் அருளட்டும். கலைஞானம் கடவுளால் கொடுக்கும் வரப்பிரசாதம். எல்லோருக்கும் எளிதில் கிடைக்காது.

அரங்கு காணும் மூவரும் தாம் கற்ற கலையை பார் போற்றப் பரப்ப வேண்டும். காயத்திரி திஷாந்தன் எனது அன்பு மாணவிகளில் ஒருவர். அவர்மிகுந்த குருபக்தி, தெளிவாக நடனத்தைக் கற்றுக்கொண்டு நடனப்போட்டிகளில் வெற்றிகள் பல பெற்றுக்கொண்டவர். தனது மாணவர்களையும் திறம்படக் கற்பித்து அரங்கில் முன்வைப்பதை ஆழ்மனதிலிருந்து அன்போடு பாராட்டி வாழ்த்துகிறேன். மாணவிகளின்பெற்றோர்க்கும், அரங்கேற்றத்திற்கு பாடுபட்ட அன்பர்களுக்கும் வாழ்த்துக்களும். வாழ்க பரதக்கலை.

பரத சூடாமணி.
கலா பூஷணம்
ஸ்ரீமதி சுபித்திரா கிருபாகரன்.
18.6.2023.
மட்டக்களப்பு.
இலங்கை.