loder

லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம்

  • Home
  • லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம்

பரத நாட்டியக்கலை என்பது ஒரு தெய்வீகக் கலையாகப் போற்றப்படுகின்றது. ஆடற்கலையின் தலைவனாக விளங்கும் நடராஜப் பெருமானின் திருப்பாதங்களில் இருந்து தோன்றியதே இக்கலை வடிவம். மனிதன் பேசத்தெரியுமுன்பே முகக்குறி கைக்குறிகளாலும், உறுப்பசைவுகளாலும் தன் உணர்ச்சியையும் கருத்தையும் வெளியிட்டான், ஆதலால், மொழிக்கும் இசைக்கும் முன்பே நடனம் இருந்தது. பண்டைய தமிழர்கள் மொழியும் இசையும் சேர்ந்து நடனக்கலைக்கு ஒரு வடிவம் இருந்தன. சொல்லிற்கேற்ற கைக்குறி கண்குறிகளும், சொல்லாலான இசைகளுக்கேற்ற ஆட்டங்களும் இயற்கையாகவே உண்டாயின. இக்கலை வடிவம் பரந்து விரிந்து பரதநாட்டிய ஆற்றுகையின் வழியாக தொன்மைக் கதைகளையும் பாரம்பரிய மற்றும் சரித்திர, இலக்கிய, மேலும் நவீன பாடல்களையும் நிகழ்வுகளையும் சித்திரித்துக் காட்டக் கூடிய ஆடல் வடிவமாக இன்று வளர்ந்துள்ளது. கலையின் அடிப்படைத் தன்மையை மாற்றாமல் பொதுவாக இவ்வாறான வளர்ச்சி ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதே.

சுவிஸ்லாந்தில் உள்ள பிரபல்யமான நாட்டியக் கல்லூரிகளில் ஒன்றான “பரததர்சனா” என்ற நுண்கலைக் கல்லூரியில் கடமை மிகுதியோடு கற்பிக்கும் இயக்குனரும் ஆசிரியருமான திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்கள், கற்றலில் ஆர்வத்தோடு கற்றிடும் மாணவர்களுக்கு பெற்றவர்போல நீங்கள் பின்தொடர்ந்தறிந்து, நல்ல நற்றுணையாக இன்று ஆற்றிடும் பணியால் என்றும் வெற்றியே. கலைத்தாயின் அருளாசியுடன் கலை வளர்த்து, நிறைவாழ்வு வாழ்வீர் என தில்லைக்கூத்தன் பொற்பாதங்கள் பணிந்து லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலய நிர்வாக சபை வாழ்த்துகின்றது.

பரததர்சனா கலைக்கூடத்தில் பயில்கின்ற மாணவச் செல்வங்கள் அனைவரிற்கும் துர்க்கை அம்மன் திருவருள் வேண்டி குறிப்பாக பத்தொன்பது ஆண்டுகளை கடந்து பயிலுகின்ற செல்வி துஷாந்தி லிங்கதாஸ், பதினைந்து ஆண்டுகளை கடந்து பயிலுகின்ற செல்வி சகானா குலேந்திரநாதன் மற்றும் செல்வி. சாருகா குலேந்திரநாதன் ஆகிய மூவரும் பரதநாட்டிய அரங்கேற்ற தருணம் கண்டு துர்க்கை அம்மன் ஆலயநிர்வாகம் மகிழ்வதோடு அம்மன் அருளோடு வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று அரங்கேற்ற நிகழ்வு சிறப்புடன் நடைபெற வாழ்த்துகின்றோம்.

எமது ஆலய நிகழ்வுகளிலும், கலை நிகழ்வுகளிலும் உங்கள் பங்களிப்பும், கலைப்டைப்புக்களும் சிறப்பானவை. உங்களால் எங்கள் கலைகள் பாதுகாக்கப்பட்டு வளர லுட்சேர்ன் துர்க்கை அம்மன் உங்களை என்றென்றும் ஆசிர்வதிக்கட்டும்.
நன்றி

இங்ஙனம்
வாழ்த்தி வணங்கும்
லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலய நிர்வாக சபையினர்.
18.06.2023.