loder

மாணவிகள் துஷாந்தி, சகானா, சாருகா

  • Home
  • மாணவிகள் துஷாந்தி, சகானா, சாருகா

எங்கள் குருவைப் பற்றி.....

அறிவென்னும் விளக்கேற்றி!
அன்பெனும் வழிகாட்டி !
சந்தனத் தென்றலாய் வலம் வந்து – குளிர்
நிலவின் ஒளி கொண்டு
கனியமுத மொழியோடு
கனிவான சிரிப்போடு
நடனம் தனைப் போதிக்கும்
எங்கள் மதிப்பிற்குரிய ஆசிரியைக்கு வணக்கங்கள்.

ஆய கலைகளின் அழகியற்கலையை கசடறக் கற்று நாம் அசடு அறச் செய்வதற்காய் சிதையாமல் எம்மைச் சிலையாக செப்பமாகச் செதுக்கியெடுத்த சிற்பியாம் நாட்டியப்பெருந்தகை…
எம் பரததர்சனா நடனாலய ஆசிரியை திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களே!

இழைந்த மனதுடன் எம் உள்ளத்துள் நுழைந்த உங்களை வாழ்த்துகின்ற வேளையிது.
முதல் அரங்கேறும் இவ்விழா நீங்கள் தந்த பரிசு.
இல்லையேல் நாங்கள் இன்று தரிசு.
எம் குறும்புகளை இரசித்து மனக்குழப்பங்களை களைந்து, பிழைகளை விடுத்து பிரிவினைப் போக்கி தோல்வியைப் பொறுத்து வெற்றியை நிறுத்தி நவரசம் யாவையும் கலந்து கனிரசமாய் எமக்கூட்டி ஒளிவிளக்காய் விளங்குகின்றீர்கள்.
நாம் பயின்றிட்ட கலையினைப் பறைசாற்றும் நேரம் இது.

மழலையில் கூறியதை
மடந்தையில் நிறைவேற்றும் மேடையிது.
நாம்
நடந்த பாதையிலே
தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ விட்ட பிழைகளைப் பொறுத்துக் கொள்ள மண்டியிட்டு மன்னிப்புக் கோருகின்றோம்.
இம்மேடையில் எம்மைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வித்துக்கள் முளைவிட்டு அரங்கேற, நீங்கள் அரங்கேற்ற வாழ்த்துகின்றோம்.
வாழ்க தமிழ் மொழி,
வாழ்க பரதம்,
வாழ்க பரததர்சனா நடனாலயம், வாழிய வாழியவே!

அன்புடன்…
துஷாந்தி.
சகானா.
சாருகா.
18.6.2023.
Luzern.