சுவிஸ்லாந்து நாட்டில் பரததர்சனா நடனாலயத்தின் இயக்குனர் திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களிடம் செவ்வனவே நடனம் பயின்று வரும் செல்வி. துஷாந்தி லிங்கதாஸ், செல்வி. சகானா குலேந்திரநாதன், செல்வி. சாருகா குலேந்திரநாதன் இவர்கள் மூவருடைய நாட்டிய அரங்கேற்றம் வரும் ஜூன் மாதம் 18, 2023 அன்று நடைபெறுவதாகக் கேள்வியுற்று மிகவும் மகிழ்சியுற்றேன்.
இவர்கள் மூவரின் நடன ஆர்வமும் நடனத்தின் மீது இவர்களுக்கு உள்ள பற்றுதலும் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இளவயது முதற் கொண்டே தங்கள் புதல்வியரின் ஆர்வம் கண்ணுற்று அவரின் முயற்சிக்கு ஆதரவு நல்கி இன்று மேடையேற்றம் காணும் ஒர் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ள இம் மாணவியரின் பெற்றோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுதல்கள்.
இந்த அரங்கேற்றம் எல்லாம் வல்ல ஆடல்வல்லானின் அருளால் மிகவும் சீரும் சிறப்புமாக நடந்தேற என் அன்பான வாழ்த்துக்கள் உரித்தாகுக. வாழ்க தமிழ்… வளர்க தமிழர்க் கலை.
ஆசியுடன்
கலைமாமணி மதுரை இரா முரளிதரன்.
13.4.2023.
சென்னை,
தமிழ்நாடு.
இந்தியா.
Copyright 2025 Driller. All Rights Reserved by Angfuzsoft