எமது தாய் தந்தையரின் திருப்பாதங்களை வணங்கி. எமது அன்பு புதல்விகள் சகானா, சாருகா இருவரும் சிறு வயதில் நடன கலையின் மீது கொண்ட ஆசை. பல்வேறு பரிணாம வளர்ச்சியினூடாக இன்று அரங்கப்பிரவேசத்தை எட்டியுள்ளது.
சகானா தனது 7 வது வயதிலும், சாருகா தனது 6 வது வயதிலும் தங்களது குருவான திரு திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களிடம் இப் பரதக்கலையை முறைப்படி கற்று இவ்வினிய நாளை எட்டியுள்ளார்கள். எமது புதல்விகள் சகானா, சாருகா இருவரும் இப் பரதக்கலையை மேலும் கற்று உயர் நிலையை அடைய எமது வாழ்த்துக்கள். அன்புடன்..