loder

ஆசிரியர்

  • Home
  • ஆசிரியர்

திருமதி.காயத்திரி திஷாந்தன்

சுவிஸ்லாந்து நாட்டில் கலைஞராகவும், பரத நாட்டிய ஆசிரியராகவும், மற்றும் நடனப்பள்ளி இயக்குனராகவும், பரததர்சனம் அறக்கட்டளை நிறுவனராகவும் தனது தனித்துவத்தை நிலைநிறுத்திக் கொண்டு வருகின்றார். இலங்கையின் யாழ் / கல்வியங்காடு, மானிப்பாயினை பூர்வீகமாகவும் கிழக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் கிராமத்தில் திரு திருமதி. செல்வராஜா கமலாசனி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். பாடசாலை அதிபராகிய தந்தை தமிழ் மீது கொண்ட பற்றும், பாட்டன் வழி கலையும், இசையும் இணைந்து மிகுந்த நாட்டம் கொண்டமையால் மூன்று வயதிலேயே பரதநாட்டியத்தை கற்பித்தனர்.

1982ம் ஆண்டு தனது முதற் குருவாக திருமதி. இராஜகுமாரி சிதம்பரம்(அம்பாறை) அவர்களிடமும்……..

1996 ம் ஆண்டு திருமதி. சுபித்திரா கிருபாகரன் (மட்டக்களப்பு) அவர்களிடமும்…….

1998 ம் ஆண்டு திருமதி.சந்திரா தண்டாயுதபாணிப்பிள்ளை (தமிழ்நாடு, இந்தியா) அவர்களிடமும்…….

2000ம் ஆண்டு திரு.அடையார் K. லட்சுமணன்(தமிழ்நாடு, இந்தியா) அவர்களிடமும்……

2002 ம் ஆண்டு திருமதி. நாகமணி சிறிநிவாசராவ் (தமிழ்நாடு, இந்தியா) அவர்களிடமும் முறைப்படி பரத நாட்டிய கலையை கற்றார்.

இருபது வருட கற்றலுக்கு பின் தனது 23 வது வயதில் 2002 ம் ஆண்டு தனது குருவான பரத சூடாமணி திருமதி. நாகமணி சிறிநிவாசராவ் அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டில் பரத நாட்டிய அரங்கேற்றத்தினை நிகழ்த்தினார்.

சம காலத்தில் தமிழ் நாடு அரசு இசைக்கல்லூரியில் பரத நாட்டிய பட்டப்படிப்பினை நிறைவு செய்து முதலாவது தரத்தில் “ஆடல்கலைமணி” பட்டத்தையும் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் B. A பட்டத்தினையும் பெற்றார். கலாபூசணம் திருமதி. சுபித்திரா கிருபாகரன் அவர்களினால் 2019 ம் ஆண்டு “நர்த்தன வித்தகி” என்ற கொளரவ பட்டம் வழங்கி கொளரவிக்கப்பட்டார். 2002 ம் ஆண்டு இல்லற வாழ்க்கையில் திரு. வெற்றிவேலு திஷாந்தன் அவர்களை திருமணம் செய்தார். 

புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் வேற்று மொழியினதும்,கலாசார மேலாண்மைக்குட்பட்டபோதும். புலம்பெயர்ந்த தமிழ் மொழிப்பற்றாளர்கள், ஆலயங்கள், அமைப்புகள் இணைந்து வளர்த்துவரும் மொழி, கலை, கலாசார விழுமியங்கள் வளர்ந்து வரும் நம் இளைய தலைமுறையினரால் ஈர்க்கப்பட்டு வளர்ந்து வருகின்றது. இவ்வாறான மொழி,கலை கலாசார விழுமியங்களை கற்றறிந்து கொண்டு வளரும் சந்ததியினரே எமது இனத்தின் விழுமியங்களை கட்டி காப்பாற்றும் தூண்கள். ஆசிரியர்கள் கட்டுக்கோப்புத்திறன் கொள்கையில் தாங்கள் ஏற்கனவே பெற்ற கல்வி, கருத்துகள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு தாங்கள் ஏற்கனவே அறிந்தவைகளோடு புதிய பரிமாணத்தில் புதிய தகவல்களையும் சேர்த்து நவீன புரிதல்களை உருவாக்குகிறார்கள். திருமதி. காயத்திரி திஷாந்தன் தான் கற்றுக் கொண்ட கலையினை கற்பித்தலும், கற்றலின் ஊடாக மானுடத்திற்கான மனிதநேய பணிகளை மேற்கொள்ளும் நோக்கோடும் 2004 ம் ஆண்டு சுவிஸ்லாந்து லுட்சேர்ன் மாநிலத்தில் பரததர்சனா நடனாலயத்தினை ஆரம்பித்தார்.

காயத்திரியின் கலைப் பயணத்தின் மானசீக குருவினர்...

Raja Kumari
2002 ம் ஆண்டு

திருமதி.நாகமணி சிறிநிவாசராவ்

பரத சூடாமணி (தமிழ்நாடு, இந்தியா)

ladcumanan
2000 ம் ஆண்டு

பத்மஸ்ரீ அடையார் K. லட்சுமணன்

தமிழ்நாடு, இந்தியா

santhira
1998 ம் ஆண்டு

திருமதி. சந்திரா தண்டாயுதபாணிப்பிள்ளை

கலைமாமணி (தமிழ்நாடு, இந்தியா)

supiththira
1996 ம் ஆண்டு

திருமதி. சுபித்திரா கிருபாகரன்

பரத சூடாமணி நாட்டியகலாமணி நர்தனவித்தகி நிருத்தியவாணி கலைசுடர் கலாபூசணம் (மட்டக்களப்பு, இலங்கை)

Rajakumari new
1982 ம் ஆண்டு

திருமதி இராஜகுமாரி சிதம்பரம்

ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் அழகியல் (திருக்கோவில் வலயம் அம்பாறை, இலங்கை)