loder

முனைவர். திருமதி. மதிவதனி சுதாகரன்.

  • Home
  • முனைவர். திருமதி. மதிவதனி சுதாகரன்.

தமிழர் போற்றும் ஆலய வழிபாட்டு கலையாகிய, பரதம் தொன்மையும், சிறப்பும் நிறைந்த சாஸ்திரக்கலையாகும்.
இக்கலை எமது கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை, பிரதிபலத்துக் காட்டும் கண்ணாடியாக, உலகெங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

புலம்பெயர் மண்ணில், மிகுந்த சிரமத்திற்கும், அன்னிய கலாசார சூழ்நிலைகளுக்கு மத்தியில் வளர்ந்து வரும், இன்றைய இளைய தலைமுறையினர், தங்களின் கலை கலாசார பண்பாடுகளை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை உற்சாகப்படுத்த வேண்டியது எம்மைப்போன் ஆசிரியர்களின் கடமையும், பொறுப்பும் ஆகும். அந்தவகையில் திருமதி. காயத்திரி திஷாந்தனிடம் செல்விகள். துஷாந்தி லிங்கதாஸ், சகானா குலேந்திரநாதன், சாருகா குலேந்திரநாதன் ஆகியோர், மிகுந்த ஆர்வத்தோடும், முயற்சியோடும் 19 வருடங்களுக்கு மேலாக பரதத்தினை முறையோடு கற்று இன்று அரங்கப்பிரவேசம் செய்கின்றனர். இத்தகையை தெய்வீகக் கலையை சிறப்பாக பயிற்றுவிக்கும், ஆசிரியர்களில் ஒருவான திருமதி. காயத்திரி திஷாந்தன் வளரும் இளம் கலைஞர்களில் ஒருவராக பாராட்டப்பட வேண்டியவராவார்.

இவரது முதல் அரங்கேற்றம் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும். இத்தகையை அரும் பெரும் செல்வமாகிய ஆடல் கலையை செல்விகள். துஷாந்தி , சகானா, சாருகா தங்கள் குரு காயத்திரி திஷாந்தனிடம், முறையாக பயின்று தாம் கற்றதை ஊர் உலகமறிய அறிக்கை செய்து கலையுலகில் ஒப்புதலை பெறுவதற்காக, முன்வந்ததையிட்டு, நெஞ்சார வாழ்த்துகின்றேன். செல்விகள் அரங்கேற்றம் காணும் இவ் இனிய வேளையில்
சகல செல்வங்களும் பெற்று, நிறைவோடு வாழ்வாங்கு வாழ வேண்டும் என கோணை நாத பெருமானை வேண்டி, திருமதி காயத்திரி திஷாந்தனையும், ஊக்கமும், ஆக்கமும் அளித்து, தமது பங்களிப்பை, வழங்கியுள்ள அரங்கேற்ற நாயகிகளின் பெற்றோர்களையும், மனமார பாராட்டி வாழ்த்துக்களையும்,ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.


Zurich.
Dr. Mathivathanie Suthaharan.
திருக்கோணேஸ்வரர்
நடனாலய இயக்குனர்
Zurich.
18.6.2023.