loder

பரததர்சனம் அறக்கட்டளை

  • Home
  • பரததர்சனம் அறக்கட்டளை

நாட்டியக்கலை உடல் அசைவுகளாலான தொன்மை வாய்ந்ததொரு மொழி வடிவம். நாட்டிய மொழியினூடு முன்னெடுக்கப்படும் கலை வடிவமும் அதன் பேசுபொருளும் நமது வாழ்வியலையும், மனிதநேயத்தையும், மானுடத்தையும் நேசிக்க வேண்டும்.

பரதக்கலையின் பேசு பொருளை அகலப்படுத்தி, மனித மனத்தின் ஆத்மார்த்தமான தேடல்களுக்கு உயர்ந்த தன்மை கொண்டவையெனும் பரிமாணத்திற்கு அதன் பேசுபொருளை எடுத்துச் செல்லவேண்டும். நாட்டியத்தினை, பக்தி மார்க்கத்தினூடாகப் பெறும் அழகியற் கலையாகவும், ஆடை, அலங்காரக் காட்சி வடிவமாகவும் எடுத்துச் செல்வதே புனிதமும், போற்றுதலுக்குரியதும். என்பதை விடவும்! மனிதநேயத்தை இறை மார்க்கமாகவும் இறைவன் அருளாகவும் கோடிட்டு கோட்பாடுகளுடன் பரததர்சனா நடனாலயம் தனது கலைப்பயணத்தின் வழியாக தாயகத்து உறவுகளுக்கான வாழ்வாதார மனிதநேய பணிகளை மேற்கொள்ளும் நோக்கோடு “பரததர்சனா அறக்கட்டளை” என்னும் தொண்டு நிறுவனத்தை இயக்கி வருகின்றது. நேர்மையான, நேர்த்தியான செயற்பாடுகள் மூலம் மக்களின் ஆதரவினையும், பாராட்டுக்களையும் பெற்று உலகளாவிய அளவில் நன்கொடையாளர்களை இணைத்து தனித்துவமான தனது பணிகளை செய்து வருகின்றது.

குடிநீர் பாவனைக்காக பொதுக்கிணறு அமைத்தல்

சுயதொழில் ஊக்குவிப்பு.

மாணவர்களுக்கு கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கல்.

அத்தியாவசிய உடைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் வழங்கல்.