loder

பரததர்சனம் அன்பில்

  • Home
  • பரததர்சனம் அன்பில்

கற்ற கல்வியை கற்பிப்பது, சிந்திக்கத் தூண்டுவது, அறிவைத் தேட ஆதாரமாக திகழ்வது….போன்றன அறிவைத் தேடியவர்களின் அருளாசி. கல்வியில் வெற்றி பெறுவதே ஒரு மாணவரின் உள் மன வலிமையின் ஒரே குறிக்கோள்.
நவீனயுகத்தின் கல்விமுறையானது வறுமை நிலை குடும்பங்களின் மாணவர்களின் வசதியின்மையின் ஆதிக்கத்திற்குட்பட்டு கல்வி கற்கும் ஆற்றலையும், கற்றுக்கொள்ளும் விருப்பத்தையும் விலக்கி கற்றலிலிருந்து விரக்தியடைய வைக்கின்றது.

தாயகத்து வாழ் வறிய நிலை மாணவர்களுக்கான கற்றலுக்கான உதவிகளை பரததர்சனம் அறக்கட்டளை “அன்பில்” என்னும் செயற்திட்டம் ஊடாக வழங்கி வருகின்றது. “மனிதப் பிறப்பின்” அவசியமும் அதன் பெருமையும் இவ்வுலக ஜீவராசிகளை மேல்நிலையடைய செய்ய இறைவனும், இயற்கையும் இணைந்து தரும் சந்தர்ப்பம். இவ்வுலக பிறப்பில் மேன்மையான வாழ்நிலை வாய்ப்பினை பெற்றவர்கள் தம் வாழ் நிலையிலும் பார்க்க வலியுடன் வாழ்பவர்களை நேசிப்பதும் அன்பும், அறமும். தாயகத்து வாழ் வறிய நிலை உறவுகளுக்கு உணவுகள் வழங்கல், தனிமையில் வாழும் வயோதிபர்களுக்கு தொடர் உலர் உணவு பொருட்கள் வழங்கல், இயற்கையின் இடர்களின் போது அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், பாடசாலை மாணவர்கள், அற நெறி பள்ளி சிறார்களுக்கு சிறப்பு மதியஉணவு வழங்கி வைத்தல், மற்றும் சமய விரத நாட்களில் ஆலயங்களில் அன்னதானம் வழங்கல் போன்ற அறநெறி பணிகளை “அன்பில்” ஊடாகவும் பணி செய்து வருகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கான மதியஉணவு வழங்கல்.

ஆதரவற்ற முதியவர்களிற்கான மாதாந்த உலர் உணவு பொருட்கள் வழங்கல்.

இடர்களின் போது அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல்.

ஆலயங்களில் அன்னதானம் வழங்கல்.