loder

சிவஸ்ரீ இராம.சசிதரக் குருக்கள்

  • Home
  • சிவஸ்ரீ இராம.சசிதரக் குருக்கள்

திரு திருமதி லிங்கதாஸ் தம்பதிகளின் மகளும் கடந்த 19 வருடங்களாக நடனக் கலையைக் கற்கும் பரததர்ஷனா நடன ஆலய ஆசிரியர் திருமதி காயத்ரி திசாந்தன் அவர்களுடைய மாணவியுமான துஷாந்தி அவர்களும், திரு திருமதி குலேந்திர நாதன் தம்பதிகளின் புத்திரிகளும், கடந்த 15 வருடங்களாக நாட்டியக் கலையை கற்கும் பரத தர்ஷனா நடன ஆலய ஆசிரியர் திருமதி காயத்ரி திஷாந்தன் அவர்களுடைய மாணவிகள் ஆகிய செல்வி சஹானா செல்வி ஷாருகா ஆகிய மூன்று மாணவிகளும் இன்று அரங்கேற்றம் காண்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.

விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, பொறுமை, தன்னம்பிக்கை, இறைநம்பிக்கை, குரு நம்பிக்கை போன்ற முக்கிய விடயங்கள் இவர்களின் நீண்ட தூர இக்கலை பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவை என்றால் மிகை அல்ல. பல சோதனைகள், வேதனைகள் சவால்களைத் தாண்டி இன்று சாதனை படைக்கும் இந்த மூன்று முத்துக்களையும் மனதார வாழ்த்துவதுடன் அவர்கள் இச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த கலை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களையும் இந்நேரத்தில் வாழ்த்தி ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரங்கேற்றம் என்பது முடிவல்ல. தொடர்ந்தும் அவர்கள் இக்கலையைக் கற்று தன் குருவுக்கும், பெற்றோருக்கும், தாயகத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயற்பட்டு அவர்களும் பல மாணவர்களை உருவாக்கி மென்மேலும் நம் கலைகளை வளர்க்க வேண்டும் எனப் பிராத்திப்பதுடன் நோய் நொடியின்றி இம்மூன்று செல்வங்களும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டுமென மனதார வாழ்த்தி ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க வளத்துடன்.

சிவஸ்ரீ இராம.சசிதரக் குருக்கள்
அருள் நிறை
இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம்
Luzern Switzerland