பழுத்த பழங்கள்நிறைந்த மரத்தை பறவைகள் தேடிவரும்.
இனித்த கரும்பை கடித்து சுவைக்க எறும்புகள் ஓடிவரும்.
கலை ஞானம் நிறைந்த குருவிடம் மாணவர் கலை கற்றிட விரும்பி வருவர்.
நிலைத்த புகழை நிச்சயம் பெற்று நித்தியம் வாழ்ந்திடும் மகளே!
மருமகளே!
பார் போற்றும் பரதக்கலையை பல காலமாக பல மாணவர்களுக்கு பண்புடனும், பரிவுடனும்,
பாசத்துடனும் பவித்திரமாய் பயிற்றுவித்து பதினெட்டாம் திகதியிலே படியேறி அரங்கேற்றும்
மகளே, மருமகளே.
முப்பெரும் தேவியராக துஷாந்தி, சகானா, சாருகா முத்துக்களும் பரத அரங்கேறி மின்னிடவும், தங்களின் அரங்கேற்றம் சிறப்பாக இனிதே நடைபெறவும் இறைவனை வேண்டி மனமுவந்து வாழ்த்துகின்றோம்.
அன்புடன்.
செ. கமலாசனி.
வெ. இரஞ்சிதமலர்